வழிபாடு
வினோத திருவிழா: மல்லிகைப்பூ தலைப்பாகையுடன் பாரி வேட்டை நிகழ்ச்சி
திண்டுக்கல் அருகே நடந்த கோவில் திருவிழாவில் மல்லிகைப்பூ தலைப்பாகையுடன் வேல் ஏந்தி பாரிவேட்டைக்கு சென்ற நிகழ்வை காண ஏராளமானோர் திரண்டனர்.
திண்டுக்கல் அருகில் உள்ள சாணார்பட்டி கம்பிளியம்பட்டி ஊராட்சி ஆண்டிபட்டியில் பழமையான முனியப்பசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பாரிவேட்டை எனப்படும் புலி பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்காக அந்த கிராமத்தை சேர்ந்த நபர்கள் தலையில் மல்லிகைப்பூ தலைப்பாகை கட்டியபடியும், கூலிங்கிளாஸ் அணிந்தபடியும் கையில் வேல் ஏந்தி உடல் முழுவதும் சந்தனம் பூசி ஊர்வலமாக வந்தனர். செண்டை மேளம், உருமி முழங்க அவர்கள் செல்ல இளைஞர்கள் ஆட்டம் பாட்டத்துடன் ஊர் மந்தையில் ஒன்று கூடினர். அப்போது அங்கு ஏற்கனவே தயார் நிலையில் இருந்த புலி வேடமிட்டவரை பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வேலால் புலியை குத்தி பிடிப்பதுபோலவும் பின்னர் அதனை தூக்கி செல்வது போலவும் கிராம மக்கள் நடித்து காட்டினர்.
இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், பல ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் புலி உள்ளிட்ட வன விலங்குகள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வந்தன. அவற்றை ஊர் திருவிழாவின்போது இளைஞர்கள் வேல் ஏந்தி சென்று அழித்து வரும் பாரிவேட்டை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வந்தது.
அதனை மறக்காமல் இன்று வரை தொடர்ந்து முனியப்பசாமி கோவில் திருவிழாவில் நாங்கள் கடைபிடித்து வருகிறோம் என்றார். இத்திருவிழாவை காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூரில் இருந்தும் ஏராளமானோர் அதிக அளவில் வந்திருந்தனர்.