வழிபாடு
ஆதிகேசவ பெருமாள்

ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா 16-ந்தேதி தொடங்குகிறது

Published On 2022-04-04 12:29 IST   |   Update On 2022-04-04 12:29:00 IST
ஸ்ரீபெரும்புதூர் ஆதி கேசவ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா வருகிற 16-ந்தேதி தொடங்கி 25-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா வருகிற 16-ந்தேதி தொடங்கி 25-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இதையொட்டி தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெறுகிறது.

சிம்மவாகனம், சேவு வாகனம், ஹம்சவாகனம், அனுமந்த வாகனம், சூர்ய பிரபை, சந்திரபிரபை, மோகினி அவதாரம், யாளி வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம், புண்ணிய கோட்டி விமானம் ஆகியவற்றில் சாமி வீதிஉலா நடைபெற உள்ளது.

வருகிற 18-ந்தேதி கருட சேவை நிகழ்ச்சி நடக்கிறது. வருகிற 20 மற்றும் 24-ந்தேதிகளில் தங்க பல்லக்கு நிகழ்ச்சி நடக்கிறது. வருகிற 22-ந்தேதி காலை தேரோட்டம் நடக்கிறது. அன்று மாலை புஷ்ப பல்லக்கு நிகழ்ச்சி நடக்கிறது. 24-ந்தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. 25-ந்தேதியுடன் விழா நிறைவுபெறுகிறது.

அதன் தொடர்ச்சியாக வருகிற 25-ந்தேதி முதல் மே 6-ந்தேதி வரை ஸ்ரீராமானுஜர் உற்சவ விழா நடக்கிறது. இதையொட்டி தினமும் காலையும், மாலையும் ராமானுஜர் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது. மே 4-ந்தேதி அதிகாலையில் திருத் தேர் நிகழ்ச்சி நடக்கிறது.

Similar News