வழிபாடு
ஸ்ரீகாளஹஸ்தி கோவில்

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நாளை உகாதி பண்டிகை

Published On 2022-04-01 10:27 IST   |   Update On 2022-04-01 10:27:00 IST
உகாதி பண்டிகையை முன்னிட்டு ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் சிம்மாசனத்திலும், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் சப்பரத்திலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நாளை (சனிக்கிழமை) தெலுங்கு புத்தாண்டான உகாதி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதையொட்டி அன்று காலை 9 மணியளவில் மூலவர் சன்னதி அருகில் உற்சவர்களான ஞானப்பிரசுனாம்பிகை சமேத ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. மாலை 4 மணியளவில் பஞ்சாங்க சிரவணம், இரவு 9 மணியளவில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் சிம்மாசனத்திலும், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் சப்பரத்திலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

முன்னதாக காலை 8.30 மணியளவில் பக்த கண்ணப்பருக்கு சிவன் கோவில் சார்பில் பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கப்படுகிறது. இரவு 7 மணியளவில் கோவில் வளாகத்தில் உள்ள கோட்ட மண்டபம் அருகில் கவிஞர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

மேற்கண்ட தகவலை கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு தெரிவித்துள்ளார்.

Similar News