வழிபாடு
குண்டம் இறங்கி நேர்த்திக்கடனை செலுத்திய பக்தர்கள்.

கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி வழிபாடு

Published On 2022-03-22 11:42 IST   |   Update On 2022-03-22 11:42:00 IST
சிறியவர் முதல் பெரியவர்கள் வரை பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கினர்.
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் பிரசித்தி பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டு செல்வார்கள். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா கடந்த பிப்ரவரி மாதம் 22-ந்தேதி சகுனம் கேட்டல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடந்து வருகிறது. தினமும் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வந்தது.

கடந்த 11-ந்தேதி தேர் முகூர்த்தம் மற்றும் ஆயக்கால் நடல் நிகழ்ச்சி நடைபெற்றது. 16ந்தேதி இரவு கிராமசாந்தி, கொடியேற்றம், ஞாயிற்றுக்கிழமை வசந்தம் பொங்கல் வைத்தல் விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று அதிகாலை குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சுற்று வட்டாரப் பகுதி பக்தர்கள் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் குண்டம் இறங்கினர். சிறியவர் முதல் பெரியவர்கள் வரை பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கினர். குண்டம் இறங்குவதற்காக நேற்று காலை முதலே பக்தர்கள் காத்திருந்தனர்.

பக்தர்களுடன் சேர்ந்து காவலர்களும் குண்டம் இறங்கினர். குண்டம் இறங்கிய பின் அனைவரும் சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 41 இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் அமைத்து கண்காணித்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக தீயணைப்புத்துறையினர் குண்டத்தை சுற்றி பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

Similar News