வழிபாடு
திருப்போரூர் கந்தசாமி கோவில்

திருப்போரூர் கந்தசாமி கோவிலில் நாளை தேரோட்டம்

Published On 2022-02-12 13:12 IST   |   Update On 2022-02-12 13:12:00 IST
திருப்போரூர் கந்தசாமி கோவிலில் நாளை (13-ந்தேதி) தேரோட்ட உற்சவம் நடைபெற உள்ளது. தேரோட்டத்தின் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக ஓ.எம்.ஆர். சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருப்போரூர் கந்தசாமி கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் தினந்தோறும் பல்வேறு வாகனங்களில் முருகப்பெருமான் எழுந்தருளி மாட வீதிகளில் வீதிஉலா வருகிறார்.

5-ம் நாளான நேற்று மங்களகிரியின் மீது வள்ளி, தெய்வானையுடன் கந்தசாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் முக்கிய வீதிகளிலும் உலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

பிரம்மோற்சவ விழாவின் 7-ம் நாளான நாளை (13-ந் தேதி) தேரோட்ட உற்சவம் நடைபெற உள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்ய உள்ளனர். தேரோட்டத்தின் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக ஓ.எம்.ஆர். சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மாமல்லபுரம், ஆலத்தூர் வழியாக வரும் வாகனங்கள் கிரிவல பாதை வழியாக காலவாக்கம் சென்று ஓ.எம்.ஆர் சாலையில் இணைந்து செல்லலாம். செங்கல்பட்டு, ஆலத்தூர் வழியாக செல்லும் பஸ்கள் நகருக்கு வெளியே நிறுத்தி இயக்கப்படும்.

சென்னையில் இருந்து கேளம்பாக்கம் வழியாக ஓ.எம்.ஆர்.சாலையில் கோயிலுக்கு வரும் வாகனங்கள் நகருக்கு வெளியே புதிய புறவழிச் சாலை மூலம் கோவிலுக்கு செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கூட்ட நெரிசல் மற்றும் அசம்பாவிதங்களை தடுப்பதற்காக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

Similar News