வழிபாடு
கங்கை நதி

மகர சங்கராந்தி அன்று கங்கையில் புனித நீராட பக்தர்களுக்கு தடை

Published On 2022-01-12 05:44 IST   |   Update On 2022-01-12 06:51:00 IST
இந்தியாவில் இதுவரை ஒமைக்ரான் வைரசால் பாதிப்பு அடைந்தவர்கள் எண்ணிக்கை 4,461 ஆக உயர்ந்துள்ளது.
ஹரித்வார்:

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,68,063 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால்  277 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் ஒரே நாளில் 400-க்கும் மேற்பட்டோருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியானது. இதுவரை ஒமைக்ரான் பாதித்தவர்கள் எண்ணிக்கை 4,461 ஆக உயர்ந்துள்ளது. 

இந்நிலையில், மகர சங்கராந்தி அன்று கங்கை நதியில் புனித நீராட பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என ஹரித்வார் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
ஒமைக்ரான் வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு ஜனவரி 14-ம் தேதி மகர சங்கராந்தி அன்று கங்கை நதியில் புனித நீராடலுக்கு முழு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Similar News