வழிபாடு
அருணாசலேஸ்வரர் கோவில்

அருணாசலேஸ்வரர் கோவிலில் இவர்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி

Published On 2022-01-10 08:37 IST   |   Update On 2022-01-10 14:25:00 IST
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று (திங்கட்கிழமை) முதல் இவர்களுக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலீசார் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்றது. முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவது குறித்து திருவண்ணாமலை நகரில் கலெக்டர் முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் திருவண்ணாமலைஅருணாசலேஸ்வரர் கோவில் எதிரே மாட வீதியில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் கலெக்டர் முருகேஷ் கூறுகையில், இன்று (திங்கட்கிழமை) முதல் 14-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை சாமி மாட வீதிஉலா பக்தர்கள் இன்றி போலீஸ் பாதுகாப்புடன் நடைபெறும். 15-ந் தேதி (சனிக்கிழமை) திருவூடல் நிகழ்ச்சி கோவில் வளாகத்திலேயே நடைபெறும்.

மேலும் இன்று (திங்கட்கிழமை) முதல் கொரோனா தடுப்பூசி 2 தவணைகள் செலுத்தியவர்கள் மட்டுமே அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள். சாமி தரிசனம் செய்ய வருகை தருபவர்கள் கட்டாயமாக கொரோனா தடுப்பூசி 2 தவணைகள் செலுத்தியதற்கான சான்று அல்லது செல்போனில் பெறப்பட்ட குறுஞ்செய்தியை காண்பித்தால் மட்டுமே கோவில் வளாக்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிக்கலாம்...வினை தீர்க்கும் விநாயகருக்கு உகந்த விரதங்கள்

Similar News