செய்திகள்
அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டிருப்பதை காணலாம்

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம்

Published On 2021-10-21 09:44 IST   |   Update On 2021-10-21 10:50:00 IST
வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு பலவகை காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாதத்தை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் உள்ள அனைத்து சாமிகளுக்கும் சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டன. ஜலகண்டேஸ்வரருக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டிருந்தது. அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு பலவகை காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல, சத்துவாச்சாரியில் உள்ள பர்வதவர்த்தினி சமேத கைலாசநாதர் கோவிலில் அம்மனுக்கு காய்கறிகளால் அலங்காரமும், மூலவர் கைலாசநாதருக்கு அன்னாபிஷேகமும் செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Similar News