செய்திகள்
திருப்பதியில் வருகிற 10-ந்தேதி ஆழ்வார் திருமஞ்சனம் - 6 மணி நேரம் தரிசனம் ரத்து
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 10-ம் தேதி ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது இதையொட்டி 6 மணி நேர தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் உகாதி, ஆனி வார ஆஸ்தானம், வருடாந் திர பிரமோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய முக்கிய தினங்களுக்கு முன்வரக்கூடிய செவ்வாய்க் கிழமைகளில் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்படுவது வழக்கம்.
திருப்பதியில் வருகிற 17-ந்தேதி ஆனிவார ஆஸ்தானம் நடைபெற உள்ளதால், வரும் 10-ந்தேதி செவ்வாய்க்கிழமை கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்பட உள்ளது. இதையொட்டி அன்று காலை 6 மணி முதல் சுமார் 5 மணி நேரத்திற்கு கோவிலில் உள்ள அனைத்து சன்னதிகளும் தண்ணீரால் சுத்தம்செய்யப்பட உள்ளது.
பின்னர் கஸ்தூரி மஞ்சள், கிச்சலிக்கட்டை, திரி சூனம், உள்பட பல்வேறு மூலிகைகளால் தயார் செய்யப்பட்ட கலவை கோவில் சுவற்றில் தெளிக் கப்படுகிறது.
இதனால் அன்று 6 மணி நேரத்திற்கு பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு 12மணிக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.