செய்திகள்
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தையும் அதில் கலந்து கொண்ட பக்தர்களை படத்தில் காணலாம்.

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்

Published On 2018-05-16 11:20 IST   |   Update On 2018-05-16 11:20:00 IST
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள அங்காளம்மன் கோவிலில் மாதந்தோறும் அமாவாசை உற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி வைகாசி அமாவாசை உற்சவ விழா நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள அங்காளம்மன் கோவிலில் மாதந்தோறும் அமாவாசை உற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி வைகாசி அமாவாசை உற்சவ விழா நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தங்க கவச அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

உற்சவ அம்மன் மயில் வாகனத்தில் அமர்ந்தவாறு அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் வைக்கப் பட்டிருந்தது. இரவு 11.45 மணியளவில் அங்கிருந்த உற்சவ அம்மனை வடக்கு வாயில் வழியாக பம்பை, மேளதாளம் முழங்க எடுத்து வந்து ஊஞ்சலில் அமர்த்தினர். தொடர்ந்து பூசாரிகள் பக்திப் பாடல்களைப் பாடினர். இரவு 12.45 மணியளவில் அம்மனுக்கு அர்ச்சனையும், தொடர்ந்து தீபாரதனையும் நடைபெற்றது.

விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர்.
Tags:    

Similar News