செய்திகள்
மயிலாடுதுறையில் காவிரி புஷ்கர விழா: பக்தர்கள் புனித நீராடினார்கள்
மயிலாடுதுறையில் காவிரி மகா புஷ்கரம் விழா கோலாகலத்துடன் இன்று தொடங்கியது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு நீராடினர்.
காவிரி புஷ்கரம் என்பது குருபகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு மாறும் குருபெயர்ச்சி காலத்தில் கொண்டாடப்படும் விழா புஷ்கர காலங்களில் காவிரியில் நீராடுவதால் பிதுர் தோஷம், நதி தோஷம் நீங்கி வறுமை, பஞ்சம் அகன்று செழுமையடைந்து உலகம் சுபிட்சம் பெருகும். மேலும் மூதாதையர்களுக்கு திதி, தர்ப்பணங்கள் கொடுத்து பாவங்களை போக்கி கொள்ளலாம்.
144 ஆண்டுகளுக்கு பிறகு காவிரி புஷ்கரம் இன்று (12-ந்தேதி) தொடங்கி 24-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த 12 நாட்களில் காவிரி துலா கட்டத்தில் புனித நீராடினால் மூன்றரை கோடி தீர்த்தத்தில் நீராடிய பலன்கள் கிடைக்கும்.
கங்கை, யமுனை, சரஸ்வதி போன்ற புண்ணிய நதிகள் தங்கள் பாவங்களை போக்கி கொண்டன என்பது ஐதீகம். இத்தலம் காசிக்கு இணையான தலமாக கருதப்படுகிறது. அதனால் காவிரி புஷ்கரம் விழாவிற்காக பக்தர்கள் புனித நீராடுவதற்காக ரிஷப தீர்த்த மண்டபத்தை சுற்றி 100 மீட்டர் நீளத்தில் நீர்தேக்கம் அமைக் கப்பட்டுள்ளது. நீர்தேக்கத் தில் உள்ள பழங்கால கிணறுகள் 12-ம் சீரமைக் கப்பட்டு போர்வெல் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது.
புஷ்கரம் விழாவை காலை 5.30 மணிக்கு காஞ்சி சங்கராச்சாரியார் சுவாமி கள் கொடியேற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து கடம் புறப்பாடு நடந்தது. இதைத்தொடர்ந்து காஞ்சி சங்கராச்சாரியார் சுவாமிகள், ஆதீனகர்த்தர்கள், மடாதிபதிகள் காவிரி துலா கட்ட புஷ்கரத்தில் நீராடினர்.
திருவாடுதுறை ஆதீனத் திற்கு சொந்தமான அபயாம் பிகை சமேத மயூரநாதர் சுவாமி, அறம் வளர்த்த நாயகி சமேத அய்யாறப்பர் சுவாமி, தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஞானாம்பிகை சமேதவதானேஸ்வரர், விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் ஆகிய சுவாமிகள் காவிரி துலாக் கட்டத்திற்கு எழுந்தருளி தீர்த்தவாரி நடந்தது.
இதைத்தொடர்ந்து பொது மக்கள் காவிரி துலா கட்டத்தில் அமைக்கப்பட்ட நீர்தேக்கத்தில் புனித நீராடினர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு நீராடினர்.
விழாவில் கலந்து கொள்ள பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
இன்று காலை 9 மணிக்கு துறவியர்கள் மாநாடு நடந்தது. இதில் இந்தியா முழுவதும் இருந்து ஏராளமான துறவிகள் கலந்து கொண்டனர். மாலை 3 மணிக்கு ஆன்மீக ஊர்வலம் நடக்கிறது. 5 மணிக்கு 40-க்கும் மேற்பட்ட கலைஞர்களுக்கு ஆதீனகர்த்தர்கள் முன்னிலையில் காஞ்சி சங்கராச்சாரியார்கள் விருது வழங்குகின்றனர்.
விழாவில் சிறப்பு ஹோமம், வேதபாராயணம், திருமுறைகள், கவியரங்கம், மங்கல ஆரத்தி, கலசபூஜை, ஆன்மீக ஊர்வலம், சகஸ்ரநாம அர்ச்சனை, ஆன்மீக சொற்பொழிவு என பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காவிரி புஷ்கர விழாவையொட்டி தஞ்சை மாவட்டம், அய்யாறப்பர் கோவில் அருகே உள்ள காவிரி ஆற்றின் புஷ்ய படித்துறை பகுதியில் மோட்டார் அமைக்கப்பட்டு பக்தர்கள் புனிதநீராட வசதி செய்யப்பட்டுள்ளது. அங்கும் ஏராளமான பக்தர்கள் இன்று புனித நீராடினர்.
கும்பகோணத்தில் வருகிற 19-ந்தேதி முதல் காவிரி புஷ்கர விழா புனித நீராடல் நிகழ்ச்சி நடக்கிறது.
இந்த மகா புஷ்கர விழா ஸ்ரீரங்கத்தில் இன்று காலை தொடங்கியது. ஜீயர் சுவாமிகள் மற்றும் வேத விற்பன்னர்கள் காவிரியாற்றில் நீராடி புனிதநீரை எடுத்துக்கொண்டு யாகசாலையை வந்தடைந்த னர். பின்னர் 8 மணியள வில் கோபூஜை நடைபெற்றது. 9.15 மணி முதல் விஷ்வக்சேன இஷ்டி யாகம் தொடங்கியது. இந்த யாகத்தின் மூலம் காரிய சித்தி மற்றும் தடங்கல்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
இந்த யாகம் மற்றும் புனித நீராடல் நிகழ்ச்சியில் தமிழகம் மட்டுமின்றி வடமாநில பக் ர்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர். காவிரி ஆற்றில் குறைந்த அளவே தண்ணீர் தேங்கியிருந்தா லும் அதில் பக்தர்கள் அனை வரும் உடலை நனைத்து தீர்த்தம் தெளித்து வழி பாடு நடத்தினர். வயது முதிர்ந்த பக்தர்கள் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் அமைக் கப்பட்டிருந்த தொட்டி போன்ற அமைப்பி லும், ஆழ் குழாயிலும் புனித நீராடினர்.