செய்திகள்

மலையக்கோவில் முருகன் கோவிலில் திருப்படி திருவிழா

Published On 2016-07-25 13:12 IST   |   Update On 2016-07-25 13:12:00 IST
மலையக்கோவில் முருகன் கோவிலில் திருப்படி திருவிழா இன்று காலை 9 மணிக்கு துவங்கி மாலை வரை நடைபெறுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் அருகே உள்ள மலையக்கோயிலில் உள்ள முருகன் கோவிலில் 49ம் ஆண்டு திருப்படி விழாவை முன்னிட்டு கணபதி ஹோமம் நடைபெற்றது. கணபதி ஹோமம் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற்றது. கணபதி ஹோமத்தை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடைபெற்றன.

தொடர்ந்து திருப்படி விழா இன்று காலை 9 மணிக்கு துவங்கி மாலை வரை நடைபெறுகிறது. விழாவில் சிவாச்சாரியார்கள் சோம சுந்தரக் குருக்கள், சுப்பிரமணியக்குருக்கள், கண்ணன் குருக்கள், விஸ்வநாத குருக்கள், சோ.சுப்பிரமணியக் குருக்கள் கலந்து கொண்டு கணபதி ஹோமத்திற்கு யாகம் வளர்த்தனர். விழாவில் நமண சமுத்திரம், நற்சாந்துப்பட்டி, விராச்சிலை, குலமங்களம், குழிபிறை, மேலப்பனையூர், பனையப்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான பொதுமக்களும், பக்த்தர்களும் கலந்து கொண்டனர்.

Similar News