செய்திகள்

சீர்காழி சட்டைநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு

Published On 2016-07-23 15:07 IST   |   Update On 2016-07-23 15:07:00 IST
சீர்காழி சட்டைநாதர் கோவிலில் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு நடந்தது.
சீர்காழி தருமபுரம் ஆதீனத்துக்கு உட்பட்ட சட்டைநாதர் சன்னதி உள்ளது.

இங்கு திருநிலை நாயகி உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் கோவில் அமைந்து உள்ளது. இங்கு 43–ம் ஆண்டு ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு திருநிலை நாயகி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு 21 வகையான திரவங்களை கொண்டு அபிஷேகம் செய்து தங்க கவசம், தங்க அங்கி அணிவித்து சிறப்பு தீபாராதனை ஆகியவை நடந்தது.

இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு விளக்கு ஏற்றி வைத்து அம்மனை வழிபட்டனர். தங்க அங்கி அலங்கார வழிபாடுகள் உபயதாரர் பச்சை மாதானம் சேது கோவிந்தவாமி ஏற்பாட்டில் நடைபெற்றது.

இதே போல் சீர்காழி புற்றடி மாரியம்மன் கோவில், கோமளவல்லி அம்மன், இரட்டை காளியம்மன், பத்ரகாளியம்மன் கோவில்களிலும் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Similar News