உலகம்

போர் நிறுத்தம் ஏற்படுமா?: ரஷிய அதிபருடன் டிரம்ப் தூதர் சந்திப்பு

Published On 2025-08-06 18:58 IST   |   Update On 2025-08-06 18:58:00 IST
  • உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தாவிட்டால் பொருளாதார தடை விதிக்கப்படும் என்றார்.
  • ரஷியாவுக்கு விதித்த 50 நாட்கள் காலக்கெடு விரைவில் முடிவடைய உள்ளது.

மாஸ்கோ:

உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தாவிட்டால் கடும் பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷியாவுக்கு 50 நாட்கள் காலக்கெடு விதித்தார். இந்தக் காலக்கெடு விரைவில் முடிவடைய உள்ளது.

இதற்கிடையே, ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் மிரட்டி வருகிறார்.

இந்நிலையில், அதிபர் டிரம்ப்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் மாஸ்கோ வந்தடைந்தார். அவர் கிரெம்ளின் மாளிகையில் அதிபர் புதினை சந்தித்துப் பேசினார். இதனை ரஷிய அதிபர் மாளிகையும் உறுதி செய்துள்ளது.

இந்தச் சந்திப்பின்போது கச்சா எண்ணெய் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இருவரும் பேசியிருக்கலாம் என தெரிகிறது. உக்ரைன் உடனான போர் நிறுத்தம் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

Tags:    

Similar News