ஜூன் 1ஆம் தேதி முதல் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 50% வரி: டிரம்ப் எச்சரிக்கை
- அமெரிக்க பொருட்களுக்கு விதிக்கப்படும் வரிக்குப் பதிலாக கூடுதல் வரி விதிக்க டிரம்ப் முடிவு.
- கடந்த ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி முதல் 90 நாட்கள் வரி விதிப்பு நடைமுறையை நிறுத்தி வைத்துள்ளார்.
அமெரிக்க அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப், அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்கும் நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரி விதிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
அதன்படி அனைத்து நாடுகளுக்கும் எதிராக வரி விதிப்பை அறிவிப்பை வெளியிட்டார். சீனா மட்டும் பதிலடி கொடுக்கும் வகையில் பதில் வரி விதிப்பை வெளியிட்டது. மற்ற நாடுகள் ஆலோசனை நடத்தி வந்தன.
அதனைத்தொடர்ந்து 90 நாட்களுக்கு வரி விதிப்பை டொனால்டு டிரம்ப் நிறுத்தி வைத்தார். ஒவ்வொரு நாடுகளடன் வரி விதிப்பு குறித்து அமெரிக்கா பேச்சுவார்தை நடத்தி வருகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்துடனும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சுவார்த்தையில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் நேரடியாக 50 சதவீதம் வரி விதிக்க விரும்புகிறேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இதனால் மீண்டும் வர்த்தக போர் வெடிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
ஏப்ரல் 2ஆம் தேதி டொனால்டு டிரம்ப் வரி விதிப்பை அறிவித்தார். பின்னர் 90 நாட்களுக்கு அதை நிறுத்தி வைத்தார். ஜூலை மாதம் தொடக்கத்தில் 90 நாட்கள் முடிவடையும். அதற்குள் பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்த அமெரிக்கா நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.