உலகம்

விசா காலத்தை தாண்டி தங்குவதை தடுக்க டிரம்ப் அதிரடி முடிவு

Published On 2025-08-06 09:04 IST   |   Update On 2025-08-06 09:04:00 IST
  • மாணவர் விசாவில் அமெரிக்காவுக்கு படிக்க செல்லும் மாணவர்கள் மீதும் கெடுபிடிகள் காட்டப்பட்டு வருகின்றன.
  • விசா காலத்தை கடந்து எந்த வெளிநாட்டினரும் தங்கக்கூடாது என்பதற்காக இத்திட்டம் கொண்டுவரப்படுகிறது.

நியூயார்க்:

அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற டிரம்ப், சட்டவிரோத குடியேற்றங்களை தடுப்பதில் தீவிரமாக இருக்கிறார். சட்டவிரோதமாக குடியேறியவர்களை கைது செய்தல், நாடு கடத்துதல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மாணவர் விசாவில் அமெரிக்காவுக்கு படிக்க செல்லும் மாணவர்கள் மீதும் கெடுபிடிகள் காட்டப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தற்காலிக பயணமாக அமெரிக்கா செல்பவர்கள் ரூ.13 லட்சம் வரை டெபாசிட் செலுத்தினால்தான் விசா வழங்கப்படும் என்ற புதிய திட்டத்தை விரைவில் சோதனை முறையில் டிரம்ப் அரசு அமல்படுத்தப்பட உள்ளது.

கடந்த 2023-ம் நிதியாண்டுக்கான அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை அறிக்கையில், அந்த ஆண்டில் 5 லட்சத்துக்கு மேற்பட்ட வெளிநாட்டினர் விசா காலத்தை தாண்டி, அமெரிக்காவில் தங்கி இருந்ததாக கூறப்பட்டுள்ளது. எனவே, விசா காலத்தை கடந்து எந்த வெளிநாட்டினரும் தங்கக்கூடாது என்பதற்காக இத்திட்டம் கொண்டுவரப்படுகிறது.

Tags:    

Similar News