உலகம்

துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் இதுவரை 4000 பேர் பலி- 20 ஆயிரத்தை கடக்க வாய்ப்புள்ளதாக தகவல்

Published On 2023-02-07 09:14 IST   |   Update On 2023-02-07 09:16:00 IST
  • நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் அந்நாட்டு அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
  • பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

துருக்கி- சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் சிக்கி இதுவரை 4000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் 7.8 ரிக்டர் அளவிலும், இரண்டாவதாக 7.5 ரிக்டர் அளவிலும், மூன்றாவது முறையாக 6.0 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் பதிவானது.

நிலநடுக்கத்தில் 4000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை தொடர்ந்து துருக்கி அரசு 7 நாட்கள் தேசிய துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அறிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் அந்நாட்டு அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்தியா, உக்ரைன் உள்ளிட்ட நாடுகளும் உதவிக்கரம் நீட்டியுள்ளன.

24 மணி நேரத்தில் அடுத்தடுத்து மூன்று முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால், பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்ட வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு கணித்துள்ளது.

Tags:    

Similar News