உலகம்

'ரொம்ப பசிக்கிறது' என கெஞ்சல்- வீடு புகுந்த வாலிபருக்கு உணவு கொடுத்த மூதாட்டி

Published On 2023-08-04 17:02 IST   |   Update On 2023-08-04 17:03:00 IST
  • வீட்டில் அவரை தவிர வேறு யாரும் இல்லாதால் என்ன செய்யலாம் என யோசித்தார்.
  • மர்ம வாலிபர் அதை வாங்கி மளமளவென சாப்பிட்டார்.

வாஷிங்டன்:

அமெரிக்காவில் உள்ள மெயினி என்ற இடத்தில் வசித்து வருபவர் மார்ஜோரி பெர்கின்ஸ் (வயது 87) .சம்பவத்தன்று இவர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு 2 மணி அளவில் விழித்துப்பார்த்தார். அப்போது அவர் படுக்கையின் அருகே மர்ம மனிதன் நின்று கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனே அந்த மர்ம வாலிபர் தான் அணிந்து இருந்த சட்டை, மற்றும் பேண்ட்டை கழற்ற முயன்றான். அவனது சட்டைப்பையில் மதுபாட்டில் மற்றும் கத்தி இருந்தது. மார்ஜோரியை வெட்ட போவதாகவும் அவன் மிரட்டினான். இதை பார்த்த மார்ஜோரி பெர்கின்ஸ் சத்தம் போட முயன்றார். அவனை திருப்பி தாக்குவதற்கான பலமும் அவரிடம் இல்லை.

வீட்டில் அவரை தவிர வேறு யாரும் இல்லாதால் என்ன செய்யலாம் என யோசித்தார். அந்த சமயம் மர்மவாலிபர் தனக்கு அதிகமாக பசிக்கிறது. வீட்டில் சாப்பாடு ஏதாவது இருந்தால் கொடுங்கள் என கெஞ்சினான்.

அவன் வீடு புகுந்து திருடதான் வந்துள்ளான் என நினைத்த மார்ஜோரிக்கு அவன் பசிக்கிறது என சொன்னதும் சற்று மனம் இறங்கியது. உடனே அவனை சமையல் அறைக்கு அழைத்து சென்றார்.அங்கிருந்த வேர்கடலை மற்றும் தேன் உள்ளிட்ட உணவு வகைகளை கொடுத்தார்.

ஏற்கனவே கோர பசியில் இருந்த மர்ம வாலிபர் அதை வாங்கி மளமளவென சாப்பிட்டார். பின்னர் அவன் மார்ஜோரி பெர்கின் சுக்கு நன்றி தெரிவித்து விட்டு அங்கிருந்து சென்று விட்டான். வீட்டில் இருந்த எந்த பொருளையும் அவன் திருடவில்லை. இது தொடர்பாக மார்ஜோரி தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News