உலகம்

வங்கதேச சேமிப்புக் கிடங்கில் பயங்கர தீ விபத்து: 5 பேர் பலி- 100 பேர் படுகாயம்

Published On 2022-06-05 04:43 GMT   |   Update On 2022-06-05 04:43 GMT
  • காயமடைந்தவர்களுக்கு ராணுவ கிளினிக்குகள் உள்பட உள்ளூர் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
  • 30 ஏக்கர் பரப்பளவில் உள்ள தனியார் கிடங்கில் சில ஹைட்ரஜன் பெராக்சைடு உள்ளிட்ட ரசாயனங்கள் இருந்தது.

வங்கதேசத்தின் முக்கிய கடல் துறைமுகமான சிட்டகாங் பகுதி வெளியே 40 கி.மீ தொலைவில் உள்ள உள்நாட்டு சேமிப்புக் கிடங்கில் நேற்று நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததை அடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் வாகனங்களுடன் விரைந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். அப்போது கிடங்கில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் தீயணைப்பு வீரர்கள் உள்பட சுமார் 100 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த தீ விபத்தில், 5 பேர் பலியாகியுள்ளனர். காயமடைந்தவர்களில் 60 முதல் 90 சதவீதம் தீக்காயங்களுடன் 20 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

காயமடைந்தவர்களுக்கு ராணுவ கிளினிக்குகள் உள்பட உள்ளூர் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படடு வருகின்றன.

விபத்து குறித்து வங்கதேச இன்லேண்ட் கண்டெய்னர் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ரூஹூல் அமின் சிக்தர் கூறியதாவது:-

30 ஏக்கர் பரப்பளவில் உள்ள தனியார் கிடங்கில் சில ஹைட்ரஜன் பெராக்சைடு உள்ளிட்ட ரசாயனங்கள் இருந்தது. கிடங்கில் 600 பேர் பணியாற்றி வந்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து தெரியவில்லை. போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News