உலகம்

தென்கொரியாவில் பொதுமக்கள் மீது காரை ஏற்றி கத்தியால் குத்திய வாலிபர்- 14 பேர் படுகாயம்

Published On 2023-08-04 06:48 GMT   |   Update On 2023-08-04 08:41 GMT
  • கார் ஏற்றியதிலும், கத்திக்குத்திலும் படுகாயம் அடைந்த 14 பேர் ஆஸ்பத்தி ரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
  • தென்கொரியாவில் இந்த ஆண்டு இது போன்ற சம்பவம் நடந்துள்ளது இது 2- வது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சியோல்:

தென்கொரியா லெசூர் மாகாணம் சியோங்கனம் பகுதியில் ஒரு வணிக வளாகம் உள்ளது. இங்கு நேற்று இரவு ஏராளமான பொதுமக்கள் திரண்டு இருந்தனர்.பலர் அங்குள்ள கடைக்குள்ளும், வெளியிலும் இருந்தனர்.

அப்போது வணிக வளாகத்துக்கு வேகமாக ஒரு கார் வந்தது. அதை ஓட்டி வந்தவர் திடீரென நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது காரை ஏற்றினார். இதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். பின்னர் காரை நிறுத்தி விட்டு மர்ம வாலிபர் கீழே இறங்கினான். திடீரென அவன் கையில் வைத்திருந்த கத்தியால் கண்ணில் பட்டவர்களை எல்லாம் சரமாரியாக குத்தினான். இதில் பலருக்கு கத்திக்குத்து விழுந்தது.

இதை பார்த்ததும் பொது மக்கள் உயிருக்கு பயந்து நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இந்த கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த 9 பேர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தனர். இது பற்றி அறிந்ததும் பாதுகாப்பு படை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்கள் மீது காரை ஏற்றி கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவருக்கு 22 வயது இருக்கும். அவர் ஏன் இந்த தாக்குதலில் ஈடுபட்டார் என தெரியவில்லை. அவருக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. இது தொடர்பாக அந்த வாலிபருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.

கார் ஏற்றியதிலும், கத்திக்குத்திலும் படுகாயம் அடைந்த 14 பேர் ஆஸ்பத்தி ரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதில் 2 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. தென்கொரியாவில் இந்த ஆண்டு இது போன்ற சம்பவம் நடந்துள்ளது இது 2- வது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News