உலகம்

Super typhoon: பிலிப்பைன்ஸில் புயல் - 10,000 மக்கள் வெளியேற்றம் - உஷார் நிலையில் சீனா, தைவான்

Published On 2025-09-23 02:33 IST   |   Update On 2025-09-23 02:33:00 IST
  • பலத்த மழை மற்றும் நிலச்சரிவு ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
  • சீனாவின் குவாங்டாங் மாகாணத்தை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டு உள்ளது.

பிலிப்பைன்சின் வடக்கு பகுதியில் ககாயன் மாகாணம் அருகே "ரகசா" என்ற புதிய புயல் உருவாகி உள்ளது.

இந்த புயல் அங்குள்ள லூசோன் நகரில் இன்று மதியம் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. மணிக்கு 215 கி.மீ. வேகத்தில் காற்று வீசி மழை பெய்வதால் முன்னெச்சரிக்கையாக 10,000க்கும் மேற்பட்ட மக்கள் பள்ளிகள் மற்றும் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பலத்த மழை மற்றும் நிலச்சரிவு ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

புயல் காரணமாக, மணிலா மற்றும் 29 மாகாணங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. புயல் எச்சரிக்கைகள் காரணமாக, உள்நாட்டு விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

இதனை தொடர்ந்து புயல் சீனாவின் குவாங்டாங் மாகாணத்தை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டு உள்ளது. இதனால் அங்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அங்கு 4,00,000 மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு 500-க்கும் மேற்பட்ட விமான சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளன.

புயல் செல்லும் வழியில் உள்ள தைவான் நாட்டிலும் அதிகாரிகள் உஷார் நிலையில் உள்ளனர். 

Tags:    

Similar News