உலகம்

சூடான்: அகதிகள் முகாம் மீது துணை ராணுவ படையினர் தாக்குதல் - 40 பேர் உயிரிழப்பு

Published On 2025-08-13 02:30 IST   |   Update On 2025-08-13 02:30:00 IST
  • இந்த அகதிகள் முகாமில் சுமார் 450,000 அகதிகள் தங்கியுள்ளனர்.
  • அரசு படைகளுக்கு எதிராக இயங்கி வரும் துணை ராணுவ படை (RSF) இந்தத் தாக்குதலை நடத்தியது.

சூடானில் அகதிகள் முகாம் மீது துணை ராணுவ படைகள் நடத்திய தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர். 19 பேர் காயமடைந்தனர்.

சூடானில் வடக்கு டார்பூர் மாகாணத்தின் அல்-ஃபாஷிருக்கு அருகிலுள்ள அகதிகள் முகாமான அபு ஷோக் முகாம் மீது திங்கள்கிழமை இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

அரசு படைகளுக்கு எதிராக இயங்கி வரும் துணை ராணுவ படை (RSF) இந்தத் தாக்குதலை நடத்தியது.

இந்த அகதிகள் முகாமில் சுமார் 450,000 அகதிகள் தங்கியுள்ளனர். இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள இந்த முகாம் கடந்த காலங்களிலிலும் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது.

அரசு படைகள் மற்றும் ஆர்எஸ்எப் இடையே நடந்து வரும் உள்நாட்டு போரில் லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து இதுபோன்ற முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News