உலகம்

கொரோனா கட்டுப்பாடுகளை நீக்கியது இலங்கை அரசு

Published On 2022-12-08 03:34 IST   |   Update On 2022-12-08 03:34:00 IST
  • சுற்றுலா பயணிகள் இலங்கை வர அந்நாட்டு சுகாதாரத் துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.
  • இலங்கையில் கொரோனா கட்டுப்பாடுகள் அதிரடியாக நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு:

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வெளிநாட்டினர் சுற்றுலா பயணிகள் இலங்கை வர அந்நாட்டின் சுகாதாரத் துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அதன்படி கொரோனா தடுப்பூசி, கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் போன்றவற்றை சுற்றுலா பயணிகள் வைத்திருக்க வேண்டும்.

இந்நிலையில், இலங்கை சுகாதார அமைச்சகம் கொரோனா கட்டுப்பாடுகளை நேற்று அதிரடியாக நீக்கம் செய்து உத்தரவிட்டது.

இலங்கை வந்த பின் கொரோனா தொற்று ஏற்பட்டால் அவர்கள் தனியார் மருத்துவமனை, ஓட்டல் அல்லது அவர்களது வீட்டிலேயே 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தலுக்கான செலவுகளை அவர்களே ஏற்க வேண்டும் என இலங்கை சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News