உலகம்

உலகிலேயே முதல் முறை.. தாவரங்கள் சுவாசிக்கும் வீடியோ - விஞ்ஞானிகள் அசத்தல் கண்டுபிடிப்பு

Published On 2026-01-20 05:27 IST   |   Update On 2026-01-20 05:27:00 IST
  • 'ஸ்டோமாட்டா இன்-சைட்' என்ற புதிய கருவியை உருவாக்கியுள்ளனர்.
  • இலைத் துளைகள் எவ்வாறு திறந்து மூடுகின்றன என்பதைத் துல்லியமாகக் காட்டுகிறது.

தாவரங்கள் அவற்றின் இலைகளில் உள்ள 'ஸ்டோமாட்டா' (Stomata) எனப்படும் நுண்துளைகள் வழியாகச் சுவாசிக்கின்றன.

இதுவரை யாரும் அதை நேரில் பார்த்ததில்லை. தற்போது அந்த அரிய நிகழ்வை முதன்முறையாக வீடியோவாகப் பதிவு செய்து அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

அமெரிக்காவின் இலினாய்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் 'ஸ்டோமாட்டா இன்-சைட்' என்ற புதிய கருவியை உருவாக்கியுள்ளனர்.

அதிநவீன Confocal microscope, Machine Learning மென்பொருள் ஆகியவற்றை இணைத்து இந்தக் கருவி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தக் கருவி, தாவரங்கள் ஒளிச்சேர்க்கைக்காகக் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சும்போதும், அதே நேரத்தில் Transpiration மூலம் நீரை வெளியேற்றும்போதும் இலைத் துளைகள் எவ்வாறு திறந்து மூடுகின்றன என்பதைத் துல்லியமாகக் காட்டுகிறது. சுமார் 5 ஆண்டுகள் உழைப்பால் இந்த கண்டுபிடிப்பை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். 

Tags:    

Similar News