உலகம்

அதிபர் ரணில் விக்ரமசிங்கே

இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் இலங்கை அதிபர்

Published On 2022-08-31 22:38 GMT   |   Update On 2022-08-31 22:39 GMT
  • சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவதற்காக இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
  • நாட்டை மீட்டெடுக்கும் வகையிலான இடைக்கால பட்ஜெட்டை இலங்கை அதிபர் தாக்கல் செய்தார்.

கொழும்பு:

அண்டை நாடான இலங்கை வரலாறு கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. மக்களின் போராட்டங்களால் ஆட்சி மாற்றமும் ஏற்பட்டது. இலங்கை அதிபராக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார்.

இந்நிலையில், நாட்டின் இடைக்கால பட்ஜெட்டை நிதி மந்திரி பொறுப்பையும் வகிக்கும் ரணில் விக்ரமசிங்கே அந்த நாட்டின் பார்லிமென்டில் நேற்று தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:

இந்த பட்ஜெட்டில் நாட்டின் பொருளாதாரத்தை மீட்க சில நடவடிக்கைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இது பாதிப்புகளில் இருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்படுத்தும் வகையில் ஐ.எம்.எப்., எனப்படும் சர்வதேச நிதியத்தின் கடனுதவி பெறுவதற்கான பேச்சு இறுதிக்கட்டத்தில் உள்ளது. விரைவில் பொருளாதார மீட்பு திட்டம் உறுதி செய்யப்படும்.

பல நாடுகளிடம் இருந்து வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்துவதை மாற்றி அமைப்பது தொடர்பாக அந்த நாடுகளுடன் பேச்சு நடந்து வருகிறது. மிக விரைவில் நாடு பழைய பொருளாதார நிலைக்கு திரும்பும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News