உலகம்

 ஓமன் ராணுவ வீரர்கள்

ராணுவப் பயிற்சிக்காக ஓமன் நாட்டு வீரர்கள் இந்தியா வருகை

Published On 2022-08-01 08:46 IST   |   Update On 2022-08-01 08:46:00 IST
  • இரு நாடுகளிடையேயான ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்த நடவடிக்கை.
  • தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ராணுவ வீரர்கள் கூட்டுப் பயிற்சி.

இந்தியா மற்றும் ஓமன் ராணுவ வீரர்கள் பங்கேற்கும் நான்காம் கட்ட கூட்டு ராணுவப் பயிற்சி இன்று தொடங்குகிறது. வரும் 13 ஆம் தேதி வரை ராஜஸ்தானில் இந்த பயிற்சி நடைபெறுகிறது.

இதில் கலந்து கொள்வதற்காக ஓமன் ராணுவ பாராசூட் படையைச் சேர்ந்த 60 வீரர்கள் இந்தியா வந்துள்ளனர். இந்திய ராணுவத்தின் சார்பில் இந்த பயிற்சியில் 18 வது காலாட் படையைச் சேர்ந்த வீரர்கள் குழு கலந்து கொள்கிறது.

இந்தியா மற்றும் ஓமன் ராணுவங்களுக்கிடையே உள்ள பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தவும், இரு நாடுகளுக்கு இடையே உறவை வலுப்படுத்துவதையும் இந்தப் பயிற்சி இலக்காகக் கொண்டுள்ளது.

தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகள், பிராந்திய பாதுகாப்பு செயல்பாடுகள் மற்றும் அமைதியை நிலை நிறுத்தும் நடவடிக்கைகள், உடற்தகுதி பயிற்சி, செயல்முறை மற்றும் நடைமுறைகள் உள்ளிட்டவை இந்த கூட்டுப் பயிற்சியில் இடம் பெறுகின்றன.

Tags:    

Similar News