உலகம்

கூகுள் இணை நிறுவனரின் மனைவியுடன் தொடர்பா?: எலான் மஸ்க் விளக்கம்

Published On 2022-07-26 03:08 GMT   |   Update On 2022-07-26 03:08 GMT
  • செர்ஜி மனைவி நிகோலை இரு முறை மட்டும்தான் பார்த்திருக்கிறேன்.
  • செர்ஜியும் நானும் நண்பர்கள்.

வாஷிங்டன் :

கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவனரும், உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவருமான செர்ஜி பிரின், தனது மனைவி நிக்கோல் ஷனாஹனிடம் இருந்து விவாகரத்து கோரி சில மாதங்களுக்கு முன்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த சூழலில் அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஊடகம் ஒன்று, கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரினின் மனைவி நிக்கோல் ஷனாஹனுக்கும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்குக்கும் தொடர்பு இருப்பதாகவும், இதனால்தான் செர்ஜி பிரின் தனது மனைவியை விவாகரத்து செய்யும் முடிவுக்கு வந்ததாகவும் செய்தி வெளியிட்டது. இந்த செய்தி சர்வதேச அளவில் பேசும் பொருளாக மாறியது.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக எலான் மஸ்க் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "இது ஒரு ஆதாரமற்ற செய்தி. செர்ஜியும் நானும் நண்பர்கள். கடந்த இரவில்கூட இருவரும் விருந்து நிகழ்ச்சியில் ஒன்றாக இருந்தோம். செர்ஜி மனைவி நிகோலை கடந்த 3 ஆண்டுகளில் இரு முறை மட்டும்தான் பார்த்திருக்கிறேன். அந்த இருமுறையிலும் கூட நாங்கள் அனைவரும் இருக்கும்போதுதான் சந்தித்தோம். எங்களுக்குள் எந்தவிதமான தொடர்பும் இல்லை" என குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News