உலகம்

சவாரியின் போது இரண்டாக உடைந்து விழுந்த ராட்டினம்.. அலறியடித்த மக்கள் - பரபரப்பு வீடியோ

Published On 2025-07-31 21:05 IST   |   Update On 2025-07-31 21:05:00 IST
  • "360 டிகிரி" என்றழைக்கப்படும் ரோலர் கோஸ்டர் சுழலும்போது இரண்டாக உடைந்து பயங்கர சத்தத்துடன் கீழே விழுந்தது.
  • சவாரியில் இருந்தவர்கள் அலறி துடித்தனர்.

சவுதி அரேபியாவின் தாயிப் நகரில் உள்ள கிரீன் மவுண்டன் பூங்காவில் ராட்டினம் ஒன்று இரண்டாக உடைந்ததில் 23 பேர் காயமடைந்தனர். மூவர் படுகாயமடைந்தனர்.

இன்று பூங்காவில், "360 டிகிரி" என்றழைக்கப்படும் ராட்டினர் சுழலும்போது அதை தாங்கும் கம்பம் இரண்டாக உடைந்து பயங்கர சத்தத்துடன் கீழே விழுந்தது.

இதனால் சவாரியில் இருந்தவர்கள் அலறி துடித்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

காயமடைந்தவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.    

Tags:    

Similar News