உலகம்

அதிபர் புதின்

உக்ரைன் விவகாரத்தில் அமைதி பேச்சுவார்த்தைக்கு இந்தியாவும், சீனாவும் ஆதரவளித்தன -அதிபர் புதின்

Published On 2022-10-14 20:19 GMT   |   Update On 2022-10-14 20:19 GMT
  • உக்ரைன், ரஷியா இடையிலான போர் 7 மாதத்தைக் கடந்துள்ளது.
  • அமைதி பேச்சுவார்த்தைக்கு இந்தியாவும், சீனாவும் ஆதரவளித்தன என அதிபர் புதின் தெரிவித்தார்.

மாஸ்கோ:

உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ம் தேதி போர் தொடுத்தது. ஏழு மாதம் கடந்தும் போர் நீடித்து வருகிறது.

இதற்கிடையே, உக்ரைனில் கைப்பற்றிய கிழக்கு மற்றும் தெற்கே உள்ள 4 பிராந்தியங்களை கடந்த 1-ம் தேதி ரஷியாவுடன் இணைத்துக் கொண்டார் அதிபர் புதின்.

இந்நிலையில், ரஷிய அதிபர் புதின் கஜகஸ்தான் சென்றிருந்தார். அப்போது அவர் அளித்த பேட்டி:

உக்ரைன் விவகாரத்தில் அமைதி பேச்சுவார்த்தை மூலம் முடிவு காணவேண்டும் என இந்தியாவும், சீனாவும் வலியுறுத்தி வருகிறது. இரு நாடுகளுமே எங்களின் நட்புறவு நாடுகள். அவர்களின் நிலைப்பாட்டை நன்கு உணர்ந்துள்ளேன்.

இதில் உக்ரைனின் தற்போதைய நிலைப்பாடு என்ன என்பது தெரிய வேண்டியது அவசியம். எனவே இந்த விவகாரத்தில் அமைதி பேச்சுவர்த்தைக்கு இந்தியாவும், சீனாவும் தனது ஆதரவை அளித்தன. அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தேவையில்லை என தெரிவித்தார்.

Tags:    

Similar News