உலகம்

இந்தியாவின் எச்சரிக்கையையும் மீறி குஜராத் அருகே ராணுவ நடவடிக்கைகளை அதிகரிக்கும் பாகிஸ்தான்

Published On 2025-10-26 08:06 IST   |   Update On 2025-10-26 08:06:00 IST
  • குஜராத்துக்கும் பாகிஸ்தானுக்கு இடையில் உள்ள 96 கி.மீ. நீளமுள்ள சதுப்பு நிலப் பகுதி சர் க்ரீக் ஆகும்.
  • இது எண்ணெய், இயற்கை எரிவாயு வளங்கள் நிறைந்த மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும்.

குஜராத்தின் ரான் ஆஃப் கட்சுக்கும் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திற்கும் இடையில் உள்ள 96 கி.மீ. நீளமுள்ள சதுப்பு நிலப் பகுதி சர் க்ரீக் (Sir Creek) ஆகும்.

இது மீன்பிடி மற்றும் எண்ணெய், இயற்கை எரிவாயு வளங்கள் நிறைந்த மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். அணமைக் காலமாக பாகிஸ்தான் இந்தப் பகுதியில் ராணுவக் கட்டமைப்புகளை அதிகப்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தன.

இந்நிலையில் சர் க்ரீக்பகுதியில் பாகிஸ்தான் எந்த வகையிலும் ஆக்கிரமிப்பு செய்ய முயன்றால், சக்திவாய்ந்த பதிலடி கொடுக்கப்படும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், இந்தியாவின் எச்சரிக்கையையும் மீறி குஜராத் அருகே ராணுவ நடவடிக்கைகளை பாகிஸ்தான் அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் எல்லையான 'சர் க்ரீக்' பகுதிக்கு பிரிட்டனிடம் இருந்து வாங்கிய 3 Hovercraft கப்பல்களை பாகிஸ்தான் கடற்படையில் சேர்த்துள்ளது. இந்த நிகழ்வில் பாகிஸ்தான் கடற்படைத் தளபதி நவீத் அஷ்ரஃப், கலந்துகொண்டார்.

Tags:    

Similar News