உலகம்

லிஸ் டிரஸ்

சிக்கலை தீர்க்க எனது அரசு தீர்க்கமான முடிவு எடுத்தது - லிஸ் டிரஸ் சொல்கிறார்

Published On 2022-10-25 10:05 GMT   |   Update On 2022-10-25 12:00 GMT
  • முக்கிய பதவியில் உள்ளவர்கள் அடுத்தடுத்து பதவி விலகியதால் பிரதமர் லிஸ் டிரஸ்சுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
  • பதவியேற்ற 45 நாட்களில் லிஸ் டிரஸ் பதவி விலகியது பரபரப்பை ஏற்படுத்தியது.

லண்டன்:

இங்கிலாந்து பிரதமராக கடந்த மாதம் பதவியேற்ற லிஸ் டிரஸ், வரி குறைப்புகளை ஆதரிக்கும் வகையில் திட்டங்களை வெளியிட்டார். மினி பட்ஜெட்டில் வரி குறைப்பு அறிவிக்கப்பட்டது. கடன் வாங்கி இதை சரிக்கட்டலாம் என தெரிவிக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு பிரதமரின் சொந்தக் கட்சி எம்.பி.க்கள் சிலர் அதிருப்தி தெரிவித்தனர்.

முக்கிய பதவியில் உள்ளவர்கள் அடுத்தடுத்து பதவி விலகியதால் பிரதமர் லிஸ் டிரஸ்சுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. அரசியல் மற்றும் பொருளாதார குழப்பம் நீடிக்கும் சூழ்நிலையில், பிரதமர் லிஸ் டிரஸ் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். பதவியேற்ற 45 நாட்களில் அவர் பதவி விலகியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், பிரதமர் லிஸ் டிரஸ் தனது கடைசி அமைச்சரவை கூட்டத்தில் இன்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

அவசரமாகவும் தீர்க்கமாகவும் கடினமாக உழைக்கும் குடும்பங்களுக்கு உதவுவதோடு, திவால் நிலையைத் தவிர்க்க ஆயிரக்கணக்கான வணிகங்களுக்கு உதவியும் வழங்கியது.

நமது நாடு புயலால் தொடர்ந்து போராடி வருகிறது. நான் பிரிட்டன் மற்றும் பிரிட்டிஷ் மக்களை நம்புகிறேன். மேலும் பிரகாசமான நாட்கள் வரப்போகிறது என்பதை நான் அறிவேன்.

புதினின் ஆக்கிரமிப்புக்கு எதிராக உக்ரைனின் துணிச்சலான போராட்டத்தை நாம் ஆதரிக்க வேண்டும். உக்ரைன் மேலோங்க வேண்டும். நம் நாட்டின் பாதுகாப்பை நாம் தொடர்ந்து பலப்படுத்த வேண்டும். அதைத்தான் நான் சாதிக்க பாடுபட்டு வருகிறேன்.

ரிஷி சுனக் நம் நாட்டின் நன்மைக்காக எல்லா வெற்றிகளையும் பெற வாழ்த்துகிறேன் என தெரிவித்தார்.

Tags:    

Similar News