உலகம்

ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் அவசரநிலை.. சேதங்களின் வீடியோ வெளியீடு

Published On 2025-05-07 11:23 IST   |   Update On 2025-05-07 11:23:00 IST
  • பஹவல்பூர் முதல் கோட்லி வரை 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டன.
  • பாகிஸ்தான் இராணுவ நிலைகள் குறிவைக்கப்படவில்லை என்றும் மத்திய அரசு கூறியது.

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவத்தால் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கப்பட்டது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இன்று அதிகாலை இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர். பஹவல்பூர் முதல் கோட்லி வரை 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டன.

முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே இந்திய ராணுவத் தாக்குதலில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முரிட்கேயில் கட்டிடம் ஒன்று சேதமடைந்ததன் காட்சிகள் வெளியாகி உள்ளன.

தங்கள் நடவடிக்கைகள் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது மட்டுமே என்றும் பாகிஸ்தான் இராணுவ நிலைகள் குறிவைக்கப்படவில்லை என்றும் மத்திய அரசு கூறியது. இந்த தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் அவசரநிலை அறிவிக்கப்பட்டது. 

Tags:    

Similar News