உலகம்

பாகிஸ்தான் அரசுக்கு எதிராக PoK மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு போராட்டம்

Published On 2025-09-29 17:29 IST   |   Update On 2025-09-29 17:29:00 IST
  • 70 ஆண்டுகளுகளாக எங்களது மக்களுக்கு மறுக்கப்படும் அடிப்படைய உரிமைகளுக்காக போராட்டம்.
  • உரிமைகளை வழங்குங்கள் அல்லது மக்களின் கோபத்தை எதிர்கொள்ளுங்கள்.

பாகிஸ்தான் அரசுக்கு எதிராக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்கள் வீதியில் திரண்டு பேராட்டம் நடத்தினர். அவாமி ஆக்ஷன் கமிட்டி (AAC) shutter-down and wheel-jam என்ற தலைப்பில் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதனால் காலவரையற்ற போராட்டமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போராட்டக்காரர்கள் ஒன்று கூடுவதை தடுக்க, நேற்றிரவு முதல் இன்டர்நெட்டை பாகிஸ்தான் அரசு தடை செய்துள்ளது. பாதுகாப்புப்படை குவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 70 ஆண்டுகளாக அரசியல் நிர்வாகத்தில் ஓரங்கட்டப்படுதல் மற்றும் பொருளாதார புறக்கணிப்பு ஆகியவற்றை முன்னிறுத்தி ஏசிசி போராட்டத்தில் குதித்துள்ளது.

இந்த அமைப்பு கட்டமைப்பு சீர்திருத்தங்கள் தொடர்பாக 38 கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளது. பாகிஸ்தானில் வசிக்கும் காஷ்மீர் அகதிகளுக்காக ஒதுக்கப்பட்ட POK சட்டமன்றத்தில் 12 சட்டமன்ற இடங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் அடங்கும்.

மானிய விலையில் மாவு, மங்களா நீர்மின் திட்டத்துடன் இணைக்கப்பட்ட நியாயமான மின் கட்டணங்கள் மற்றும் பாகிஸ்தான் வாக்குறுதியளித்த நீண்ட காலமாக தாமதமான சீர்திருத்தங்களை செயல்படுத்துதல் ஆகிய கோரிக்கைகளும் அடங்கும்.

ஏசிசி-யின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சவுகாத் நவாஸ் மிர் "எங்களுடைய பிரசாரம் எந்தவொரு அமைப்புக்கும் எதிரானது அல்ல. 70 ஆண்டுகளுகளாக எங்களது மக்களுக்கு மறுக்கப்படும் அடிப்படைய உரிமைகளுக்காக. போதும். உரிமைகளை வழங்குங்கள் அல்லது மக்களின் கோபத்தை எதிர்கொள்ளுங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News