உலகம்

ஓட்டல் உணவில் கிடந்த மூக்கு வளையம்

Published On 2024-08-06 15:05 IST   |   Update On 2024-08-06 15:05:00 IST
  • பதிவு 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றது.
  • பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அமெரிக்காவின் விர்ஜினியா பகுதியை சேர்ந்தவர் ஜெர்மி. இவர் சம்பவத்தன்று அங்குள்ள பிரபல உணவகம் ஒன்றிற்கு சாப்பிட சென்றார். அப்போது தனக்கு பிடித்த சலுபா உணவு வகைகளை ஆர்டர் செய்து சாப்பிட்டார்.

அப்போது அவர் கூர்மையான ஒன்றை கடித்ததால் அதிர்ச்சியடைந்தார். உடனே தான் சாப்பிட்ட உணவை வெளியே எடுத்து பார்த்த போது அதில் மூக்கு வளையம் இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் நடந்த சம்பவத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அவரின் இந்த பதிவு 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றது.

இதைப்பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News