உலகம்

மின்சார ஆட்டோ கூரையில் நடனம் ஆடிய வாலிபர்

Published On 2024-04-06 16:07 IST   |   Update On 2024-04-06 16:07:00 IST
  • வீடியோ வைரலாகி 90 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.
  • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் ஜீத்தின் செயலை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆவதற்காகவே வாலிபர்கள் பலரும் சாகசங்கள் செய்வது, பொது இடங்களில் நடனம் ஆடுவது போன்ற வீடியோக்களை எடுத்து பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் மின்சார ஆட்டோவின் கூரையில் நடனம் ஆடிய வாலிபர் ஒருவர் அதில் இருந்து கீழே விழுந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. பாபுசிங் என்ற அந்த நபர் ஜீத் என்ற இந்தி படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு மின்சார ஆட்டோவின் கூரையில் நின்று நடனம் ஆடும் காட்சிகளுடன் வீடியோ தொடங்குகிறது.

ஆனால் ஆட்டோவின் மீது அவர் நடனம் ஆடுவதை பார்க்காமல் டிரைவர் வாகனத்தை இயக்கிய போது, ஜீத் ஆட்டோவில் இருந்து கீழே விழும் காட்சிகள் வீடியோவில் உள்ளது. இந்த வீடியோ வைரலாகி 90 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் ஜீத்தின் இந்த செயலை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


Full View


Tags:    

Similar News