உலகம்

சிங்கப்பூரை உலுக்கிய பணிப்பெண் கொலை வழக்கு: இந்திய பெண்ணுக்கு 14 ஆண்டுகள் சிறை

Published On 2023-01-10 03:54 GMT   |   Update On 2023-01-10 03:54 GMT
  • இந்த கொலை சம்பவம் சிங்கப்பூரையே உலுக்கியது.
  • காயத்ரிக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

சிங்கப்பூர் :

சிங்கப்பூரில் வசித்து வருபவர் இந்திய வம்சாவளி பெண் காயத்ரி முருகையன் (வயது 41). கடந்த 2015-ம் ஆண்டு இவரது வீட்டில் மியான்மர் நாட்டை சேர்ந்த பியாங் நகாய்டான் என்ற பெண் வீட்டு வேலை பணிக்கு சேர்ந்தார்.

இந்த சூழலில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் பியாங் மர்மமான முறையில் உயிரிழந்தார். போலீசார் அவரது உடலை மீட்டு பிரேதபரிசோதனை செய்தபோது, பல மாதங்களாக அவர் கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டதால் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் காயத்ரி தனது வீட்டு பணிப்பெண் பியாங்குக்கு சரியாக உணவு அளிக்காமல் அடித்து கொடுமைபடுத்தி வந்தது வெளிச்சத்துக்கு வந்தது. இதற்கு காயத்ரியின் தாயார் பிரேமா நாராயணசாமி உடந்தையாக இருந்ததும் தெரிந்தது. இந்த கொலை சம்பவம் சிங்கப்பூரையே உலுக்கியது.

இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக காயத்ரி மற்றும் பிரேமா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். பின்னர் கோர்ட்டில் விசாரணை நடந்தது. இதில் காயத்ரிக்கு கடந்த 2021-ம் ஆண்டு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கில் காயத்ரியின் தாயார் பிரேமாவுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிங்கப்பூர் கோர்ட்டு நேற்று தீர்ப்பு அளித்தது.

Tags:    

Similar News