உலகம்

அரசியலமைப்பு திருத்தத்தை எதிர்த்து பாகிஸ்தானில் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு

Published On 2025-11-17 05:09 IST   |   Update On 2025-11-17 05:09:00 IST
  • சுப்ரீம் கோர்ட் சிவில் வழக்குகளை மட்டுமே விசாரிக்கும் வகையில் தரம் குறைக்கப்பட்டுள்ளது.
  • இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சிலர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் 27-வது அரசியலமைப்பு திருத்த சட்டம் கூட்டாட்சி அரசியலமைப்பு நீதிமன்றம் உருவாக்க வழிவகை செய்கிறது. இதன்மூலம் வழக்குகளை தானாக முன்வந்து விசாரித்தல், நீதிபதிகள் இடமாற்றம் உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் கூட்டாட்சி அரசியலமைப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்படும். இதனால் சுப்ரீம் கோர்ட் சிவில் வழக்குகளை மட்டுமே விசாரிக்கும் வகையில் தரம் குறைக்கப்பட்டு உள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மன்சூர் அலி ஷா, அத்தர் மினல்லா மற்றும் லாகூர் ஐகோர்ட் நீதிபதி ஷம்ஸ் மெஹ்மூத் மிர்சா ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

இந்நிலையில், 27-வது அரசியலமைப்பு திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து லாகூரில் உள்ள வக்கீல்கள் கால வரையற்ற கோர்ட் புறக்கணிப்பை அறிவித்துள்ளனர். மேலும் மற்ற நீதிபதிகளும் எதிர்ப்பை காட்டும் விதமாக தங்களது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News