உலகம்

கடைசி நேரத்தில் விமானம் ரத்து.. தீபாவளிக்கு நாடு திரும்ப முடியாமல் இத்தாலியில் தவிக்கும் இந்தியர்கள்

Published On 2025-10-19 11:28 IST   |   Update On 2025-10-19 11:28:00 IST
  • மிலனில் இருந்து டெல்லிக்குச் செல்லவிருந்த ஏ.ஐ138 விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டது.
  • அனைத்து பயணிகளுக்கும் உணவு உள்பட தேவையான அனைத்து உதவிகளையும் ஏர் இந்தியா தொடர்ந்து வழங்குகிறது

இத்தாலியின் மிலன் நகரில் டெல்லிக்கு புறப்பட தயாராக இருந்த ஏர்-இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது. எனவே விமானம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.

இதனால் தீபாவளி பண்டிகைக்காக இந்தியா திரும்பயிருந்த நூற்றுக்கணக்கான பயணிகள் இத்தாலியில் தவித்து வருகிறார்கள்.

இது குறித்து ஏர் இந்தியா விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

17-ந் தேதி மிலனில் இருந்து டெல்லிக்குச் செல்லவிருந்த ஏ.ஐ138 விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டது. பயணிகள் அனைவருக்கும் தங்குமிடங்கள் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது. அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யும் பணி நடந்து வருகிறது.

பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு நாங்கள் வருந்துகிறோம் என்று தெரிவித்து உள்ளது. மேலும் அனைத்து பயணிகளுக்கும் உணவு உள்பட தேவையான அனைத்து  உதவிகளையும் ஏர் இந்தியா தொடர்ந்து வழங்குகிறது என்றும் தெரிவித்து உள்ளது. மாற்று விமானம் ஏற்பாடு செய்ய தாமதம் ஆகி வருவதால் தீபாவளிக்கு நாடு திரும்ப முடியாமல் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Tags:    

Similar News