உலகம்

டிரம்ப் ஒரு சர்வாதிகாரி... அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டி - மனம் திறந்த கமலா ஹாரிஸ்

Published On 2025-10-26 08:31 IST   |   Update On 2025-10-26 08:31:00 IST
  • எதிர்காலத்தில் வெள்ளை மாளிகையில் ஒரு பெண் அதிபர் நிச்சயம் இருப்பார்.
  • ஒரு பாசிசவாதியாகவும், சர்வாதிகாரியாகவும் டொனால்ட் டிரம்ப் அரசை வழி நடத்துகிறார்.

கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபராக இருந்தவரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிசும் போட்டியிட்டனர். இதில் வெற்றி பெற்று டிரம்ப் அதிபராக பதவியேற்றார்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.

கமலா ஹாரிஸ் கொடுத்த சமீபத்திய நேர்காணலில், "எதிர்காலத்தில் வெள்ளை மாளிகையில் ஒரு பெண் அதிபர் நிச்சயம் இருப்பார். அது நானாக கூட இருக்கலாம். ஒரு பாசிசவாதியாகவும், சர்வாதிகாரியாகவும் டொனால்ட் டிரம்ப் அரசை வழி நடத்துவார் என்ற எனது கணிப்புகள் உண்மையாகிவிட்டன" என்று தெரிவித்தார். 

Tags:    

Similar News