உலகம்

ரூ. 1.3 கோடி சம்பளம், மாதம் 20 நாட்கள் லீவு - வைரலாகும் ஆட்கள் தேவை விளம்பரம்!

Published On 2023-05-14 22:52 IST   |   Update On 2023-05-14 22:52:00 IST
  • புளூகிபன் மருத்துவ நிறுவனம் பிரிட்டன் மருத்துவர்களை பணியமர்த்த கவர்ச்சிகர விளம்பரத்தை வெளியிட்டது.
  • வைரல் ஆகி வரும் விளம்பரம் பிரிடிஷ் மருத்துவ இதழின் வலைதளத்தில் பதிவிடப்பட்டு இருக்கிறது.

ஒவ்வொரு மாதமும் 20 நாட்கள் விடுமுறை, மீதமுள்ள நாட்களுக்கு கவர்ச்சிகர ஊதியம் வழங்குவதாக கூறும் விளம்பர பதிவு வைரல் ஆகி வருகிறது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த புளூகிபன் மருத்துவ நிறுவனம் பிரிட்டன் மருத்துவர்களை பணியில் அமர்த்த மிகவும் கவர்ச்சிகர விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

வைரல் ஆகி வரும் விளம்ர பதிவில், "டாக்டர் ஆடம் கே ஃபீலிங் வந்துவிட்டதா? ஆஸ்திரேலியாவுக்கு வாங்க! பிரிட்டனை சேர்ந்த மருத்துவராக இருக்க வேண்டும். மாதம் 10 ஷிஃப்டுகள் மட்டும் வேலை செய்து, 20 நாட்களுக்கு விடுமுறை எடுத்துக்கொள்ளலாம்."

"ஆண்டு வருமானம் 2 லட்சத்து 40 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1.3 கோடி. இத்துடன் தங்கும் இடம் வழங்கப்படும். சைன்-இன் போனஸ் தொகையாக ரூ. 2.7 லட்சம் வழங்கப்படும்," என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் விளம்பரம் பிரிடிஷ் மருத்துவ இதழின் வலைதளத்தில் பதிவிடப்பட்டு இருக்கிறது. இந்த விளம்பரத்தை எழுத்தாளர் மற்றும் முன்னாள் மருத்துவ நிபுணர் ஆடம் கே தனது டுவிட்டரில் பகிர்ந்து இருக்கிறார். 

Tags:    

Similar News