உலகம்

லெபனானின் தெற்கு பகுதியில் இஸ்ரேல் டிரோன் தாக்குதல்

Published On 2024-02-11 02:23 GMT   |   Update On 2024-02-11 02:23 GMT
  • லெபனான் எல்லை அருகில் உள்ள பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்.
  • கார் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஹமாஸ்க்கு எதிராக காசா மீது பயங்கர தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் லாபானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.

ஜோர்டானில் உள்ள அமெரிக்க வீரர்கள் மீது டிரான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 3 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர். அதில் இருந்து சிரியா, ஈராக், லெபனான் நாடுகளில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக்குழுக்கள் மீது அமெரிக்கா டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறது.

ஏற்கனவே மத்திய கிழக்கு பகுதி இஸ்ரேல்- ஹமாஸ் போரால் பதற்றமாக இருக்கும் நிலையில் தற்போது இந்த டிரோன் தாக்குதல்களால் மேலும் மோசம் அடைந்துள்ளது.

இந்த நிலையில்தான் லெபனான் நாட்டின் தெற்கு துறைமுக நகரான சிடோனில் இஸ்ரேல் டிரோன் தாக்குல் நடத்தியுள்ளது. கார் ஒன்றை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் இருவர் உயிரிழந்ததாகுவம், இருவர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

டிரோன் தாக்குதல் நடத்தப்படுவதாக குற்றஞ்சாட்டும் லெபனானில், இஸ்ரேல் தாக்குதல் மூலம் ஹிஸ்புல்லாவின் முக்கியமான தளபதில் கொல்லப்பட்டுள்ளனர். அதேபோல் ஹாமஸ் அமைப்பின் முக்கிய நபர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News