உலகம்

காசாவில் இஸ்ரேல் தாக்குதல்.. உணவுக்காக காத்திருந்த 31 பேர் உட்பட 89 பேர் ஒரே நாளில் கொன்று குவிப்பு

Published On 2025-08-13 03:15 IST   |   Update On 2025-08-13 03:16:00 IST
  • 103 குழந்தைகள் உட்பட பட்டினியால் இறந்தவர்களின் எண்ணிக்கை 227 ஆக உயர்ந்துள்ளது.
  • காசா மருத்துவமனை மீது நடந்த தாக்குதலில் 5 அல் ஜசீரா பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டது இஸ்ரேலுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

காசாவில், கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய தாக்குதல்களில் உணவுக்காக காத்திருந்த 31 பேர் உட்பட 89 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 513 பேர் காயமடைந்துள்ளனர்.

கடுமையான பசியால் வாடும் காசாவில் இரண்டு குழந்தைகள் உட்பட மேலும் ஐந்து பாலஸ்தீனியர்கள் இறந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதன் மூலம்103 குழந்தைகள் உட்பட பட்டினியால் இறந்தவர்களின் எண்ணிக்கை 227 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை காசா மருத்துவமனை மீது நடந்த தாக்குதலில் 5 அல் ஜசீரா பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டது சர்வதேச அளவில் இஸ்ரேலுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

Similar News