உலகம்

தெற்கு லெபனானில் காரை குறிவைத்து இஸ்ரேல் வான்தாக்குதல்: ஒருவர் பலி- 11 பேர் காயம்

Published On 2025-11-19 16:59 IST   |   Update On 2025-11-19 16:59:00 IST
  • செவ்வாய்க்கிழமை இரவு அகதிகள் முகாம் மீது தாக்குதால் நடத்தப்பட்டது.
  • இன்று காலை கார் மீது தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல்.

தெற்கு லெபனானில் உள்ள டிரி கிராமம் அருகே இன்று காலை இஸ்ரேல், கார்மீது வான்தாக்குதல் நடத்தியது. இதில் காரில் சென்ற ஒருவர் கொல்லப்பட்டார். அவர் யார் என்று அடையாளம் காணப்படவில்லை. அந்த கார் அருகே சென்று கொண்டிருந்த பேருந்தும் இந்த தாக்குதலில் சேதமடைந்தது. இதில் மாணவர்கள் உள்பட 11 பேர் காயம் அடைந்தனர்.

செவ்வாய்க்கிழமை இரவு பாலஸ்தீன அகதிகள் முகாம் (ஐன்-எல்-ஹல்வே) மீது இஸ்ரேல் டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

இஸ்ரேல்- ஹிஸ்புல்லா இடையே ஒரு வருடத்திற்கு மேலாக சண்டை நடைபெற்றது. காசாவுக்கு உதவி பொருட்கள் கொண்டு செல்ல இஸ்ரேல் அனுமதி அளித்ததால், இஸ்ரேல்- ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது. அதன்பின் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஹமாஸ் பயிற்சி மையத்தின் மீது தாக்குதல் நடத்தினோம். இஸ்ரேல் மற்றும் இஸ்ரேல் ராணுவத்திற்கு எதிராக தாக்குதல் நடத்த தயாராகி வந்த நிலையில், தாக்குதல் நடத்தப்பட்டது என இஸ்ரேல் தெரிவித்திருந்தது.

அதேவேளையில் தாக்குதல் நடத்தப்பட்டது விளையாட்டு மைதானம், பயிற்சி மையம் இல்லை என ஹமாஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News