உலகம்

காசாவில் பள்ளி மீது குண்டு வீச்சு- 16 பேர் பலி

Published On 2024-07-07 15:45 IST   |   Update On 2024-07-07 15:45:00 IST
  • இஸ்ரேல் படையினர் சரமாரியாக குண்டுகளை வீசினர்.
  • போர் நிறுத்த முயற்சி நடந்து வரும் சூழ்நிலையில் இந்த தாக்குதல் மேலும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

காசாவில் இஸ்ரேல் படையினர் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் உயிருக்கு பயந்த பொதுமக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்கி உள்ளனர்.

இந்த நிலையில் மத்திய காசா அல்நுசிராத் என்ற பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இஸ்ரேல் படையினர் சரமாரியாக குண்டுகளை வீசினர்.

இதில் அங்கு அகதிகளாக தங்கியிருந்த 16 பேர் இறந்து விட்டதாகவும், 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்ததாகவும் பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்த முயற்சி நடந்து வரும் சூழ்நிலையில் இந்த தாக்குதல் மேலும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News