இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்
ஆபரேஷன் அஜய் திட்டத்துக்கு தேவையான உதவிகளை இஸ்ரேல் செய்யும் என தூதரக அதிகாரி தெரிவித்தார்.
ஆபரேஷன் அஜய் திட்டத்தின்படி, இந்தியர்களை ஏற்றிக்கொண்டு முதல் விமானம் இன்று மாலை டெல் அவிவ் நகரில் இருந்து புறப்படும் என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் போர் குறித்து சவுதி இளவரசர் முகமத் பின் சல்மானும், ஈரான் குடியரசு தலைவர் இப்ராகிம் ரெய்சியும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர்.
அமெரிக்கர்கள் இஸ்ரேல் செல்வதற்கான பயணத்தை மறு மதிப்பீடு செய்யும்படியும், காசா நகருக்குச் செல்வதை தவிர்க்கும் படியும் அந்நாட்டு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல் வெளியிட்டுள்ளது.
ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் உள்ள 22 அமெரிக்கர்கள் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு பாதுகாப்புத் துறை அதிகாரப்பூவர்மாக அறிவித்துள்ளது.
பொதுமக்கள் வீட்டிலேயே இருக்குமாறும், கதவுகளைப் பூட்டிக்கொள்ளுமாறும், ஊடுருவல் சாத்தியம் குறித்து எச்சரிக்கும்படியும் இஸ்ரேலிய முகப்புக் கட்டளை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் எதிர்க்கட்சி தலைவர் பென்னி இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு இருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்து இருக்கிறது. அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டதை தொடர்ந்து போர் மேலாண்மை அமைச்சரவை அமைக்கப்பட்டு இருக்கிறது.
அமெரிக்கா இஸ்ரேலுடன் துணை நிற்கிறது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து ஜோ பைடன் வெளியிட்டுள்ள வீடியோவில்," பயங்கரவாதத்தை எந்த விதத்திலும் நியாப்படுத்த முடியாது. மக்களை காக்க, தங்கள் நாட்டை தற்காத்துக் கொள்ள தாக்குதலுக்கு பதிலடி தர இஸ்ரேலுக்கு தேவையான உதவிகளை அமெரிக்கா செய்யும்.
தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேலுக்கு உதவுவோம்" என ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் குண்டு வீச்சில் ஐ.நா.ஊழியர்கள் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
நீங்கள் சாவீர்கள் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு, துருக்கி அமைச்சர் நாசிஃப் இல்மாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேல் படைகளின் தாக்குதலை தொடர்ந்து அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.