இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்
இஸ்ரேல் - பாலஸ்தீனத்தின் தற்போதைய நிலைமைகளுக்கு ஏற்ப உதவிகளை செய்ய டெல்லியில் 24 மணி நேர கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது.
கட்டுபாட்டு அறை தொடர்பு எண்கள் - 1800118797, +91-11-23012113,+91-11-23014104,+91-11-23017905, +919968291988
இஸ்ரேலில் உள்ள இந்தியர்களுக்கு 24 மணி நேர அவசரகால உதவிக்கு 972-35226748, 972-543278392 உள்ளிட்ட எண்களை தொடர்பு கொள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் இந்தியர்கள் தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
இஸ்ரேலின் வடக்கு பகுதியானது லெபனானில் இருந்து தாக்கப்பட்ட நிலையில், எதிர்த் தாக்குதல் நடந்து வருகிறது. மேலும், லெபனானில் இருந்து நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடி கொடுப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா பொறுப்பேற்றுள்ளது.
காசா முனைக்கு மின் வினியோகம் செய்யும் நிறுவனங்களிடம் உள்ள எரிபொருள் கணிசமாகக் குறைந்து வருவதால் மின் வினியோகம் தடைபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஹமாஸ் தாக்குதல் நடத்தியதற்கு இஸ்ரேல்தான் பொறுப்பு என குற்றம்சாட்டிய ஹார்வர்டு மாணவர் அமைப்புகளுக்கு கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.
காசாவில் 950 பேர் உயிரிழந்த நிலையில், 5 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் தாக்குதலில் 169 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களுடன் முதல் விமானம் தெற்கு இஸ்ரேலில் தரையிறங்கியுள்ளது என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஹமாஸ்- இஸ்ரேல் போரில் 3 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலில் பலி எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. காசாவில் 900 பேர் உயிரிழந்துள்ளனர்.