இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்
டெல் அவிவ் நகரில் இருந்து 235 இந்தியர்களை அழைத்துக் கொண்டு 2-வது சிறப்பு விமானம் இந்தியா புறப்பட்டுள்ளது. இந்த தகவலை மத்திய மந்திரி ஜெய்சங்கர் தனது 'எக்ஸ்' சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்படக் கூடும் என்பதால் சைரன் எச்சரிக்கை ஒலிக்கப்பட்டதும், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களை தேடி ஓட்டம் பிடித்தனர்.
காசாவின் வடக்கு பகுதியில் இருந்து பொதுமக்கள் அனைவரும் அடுத்த 24 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என இஸ்ரேல் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இஸ்ரேலின் இந்த அறிவிப்புக்கு ஐ.நா. சபை கண்டனம் தெரிவித்துள்ளது. சுமார் 11 லட்சம் பேர் வாழும் வடக்கு காசா பகுதியில் இருந்து 24 மணி நேரத்திற்குள் அனைவரும் வெளியேறுவது சாத்தியமில்லாதது எனவும், இதனால் மோசமான விளைவுகள் ஏற்படக்கூடும் எனவும் ஐ.நா. எச்சரித்துள்ளது.
காசாவில் உள்ள மக்களுக்கு ஆதரவாக வெஸ்ட் பேங்க் நகரில் பாலஸ்தீனியர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த வன்முறையில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
வடக்கு இஸ்ரேலில் ராக்கெட் எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்படுவதால் இஸ்ரேல்- லெபனான் எல்லையில் மீண்டும் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை விட மோசமானது ஹமாஸ் அமைப்பு என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் அஸ்டின் குற்றம்சாட்டியுள்ளார்.
தாக்குதல்களை நிறுத்த இஸ்ரேல் மற்றும் காசா அமைப்புக்கு ரஷிய அதிபர் புதின் வலியுறுத்தி உள்ளார். கனரக ஆயுதங்கள் மூலம் தாக்குவதால் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு உயிரிழப்பு ஏற்படுவதாக புதின் கவலை தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தை மூலமாக மட்டுமே தீர்வு காண முடியும் எனவும் அவர் கூறினார்.
பாலஸ்தீன அதிபர் அப்பாஸ்-ஐ அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கின் ஜோர்டன் தலைநகர் அம்மானில் சந்தித்தார்.
வட காசா மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை நிச்சயம் இடம் மாற்றம் செய்ய முடியாது என்று பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் உலக சுகாதார மையத்திடம் தெரிவித்து உள்ளது.
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கென் ஜோர்டான் வந்துள்ளார். இந்நலையில், இஸ்ரேல்- ஜோர்டான் எல்கை்கு வந்துள்ள ஜோர்டானியர்கள் இஸ்ரேல் படைகளுக்கு எதிராக கண்ட முழக்கம் எழுப்பி வருகின்றனர்.
மேலும், இஸ்ரேல்- பாலஸ்தீன போரில் பாலஸ்தீனத்திற்கு ஜோர்டானியர்கள் ஆதரவுக் குரல் கொடுத்து வருகின்றனர்.