இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்
ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அமெரிக்க ராணுவ மந்திரி லாயிட் ஆஸ்டின் இன்று இஸ்ரேல் வந்துள்ளார். அவர் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை சந்திக்க உள்ளார்.
இஸ்ரேல் நாட்டில் சிக்கித் தவித்த 14 தமிழர்கள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களை அமைச்சர் மா.சுப்பிரமணியம் வரவேற்றார்.
அடுத்த 24 மணி நேரத்தில் துரிதமாக வெளியேற வேண்டும் என்ற இஸ்ரேலின் எச்சரிக்கையை தொடர்ந்து, வட காசாவில் உள்ள 10 லட்சம் மக்கள் எங்கு செல்வதென தெரியாமல் பரிதவித்து வருகின்றனர்.
வட காசாவில் உள்ள 10 லட்சம் மக்கள் அடுத்த 24 மணி நேரத்தில் துரிதமாக வெளியேற வேண்டும் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காசா நகரத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை அனுப்பவேண்டும் என உலகளாவிய நிவாரண அமைப்புகளிடம் ஹமாஸ் அமைப்பு வலியுறுத்தி உள்ளது.
அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் நேற்று இஸ்ரேல் சென்றார். தலைநகர் டெல் அவிவில் உள்ள ராணுவ அமைச்சகத்தில் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை சந்தித்தார். இஸ்ரேலுக்கு அமெரிக்கா துணை நிற்கும் என கூறினார்.
ஹமாஸ் அமைப்பு முழுதும் ஒழிக்கப்படும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு உறுதிபட தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இருந்து நேபாளம், தனது 253 மாணவர்களை விமானம் மூலம் அழைத்து வந்தது. விமானத்தில் பயணித்த மாணவர்களை வெளியுறவு மந்திரி என்.பி.சவத் வரவேற்றார்.
இஸ்ரேல் நாட்டில் சிக்கித் தவித்த 212 இந்தியர்களுடன் தனி விமானம் இன்று காலை இந்தியா வந்தடைந்துள்ளது. அவர்களை மத்திய மந்திரி ராஜிவ் சந்திரசேகர் வரவேற்றார் என மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் நாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் தனி விமானம் மூலம் நாளை காலை இந்தியா வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.