இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்
ஹமாஸ் அமைப்பின் மற்றொரு கமாண்டர், தங்களது வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார் என இஸ்ரேல் விமானப் படை இன்று தெரிவித்துள்ளது. கொல்லப்பட்டது நுக்பா பிரிவின் தளபதியான பில்லால் அல்-கெத்ரா என தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக ஏராளமான அமெரிக்கர்கள் வெள்ளை மாளிகை முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காசாவிலிருந்து தப்பி ஓட முயலும் பொதுமக்களை வெளியேற வேண்டாம் என ஹமாஸ் அமைப்பினர் தடுத்து வருகின்றனர் என இஸ்ரேல் பாதுகாப்புத்துறை குற்றம்சாட்டியுள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன், பாலஸ்தீனிய அதிபர் மஹமவுத் அப்பாஸ் தொலைபேசியில் உரையாடினார். அப்போது காசாவில் பாதுகாப்பு வழித்தடங்களைத் திறப்பது, மருந்துகள், தண்ணீர், மின்சாரம், எரிபொருளை காசாவிற்குள் அனுமதிப்பது குறித்து வலியுறுத்தினார்.
இஸ்ரேலுக்கான ஆதரவை மேலும் உறுதி செய்யும் வகையிலும், ஈரான் உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் வகையிலும் 2வது விமானம் தாங்கி போர்க்கப்பலை அமெரிக்கா மத்திய தரைக்கடல் பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளது.
இஸ்ரேல் நாட்டில் சிக்கித் தவித்த 274 இந்தியர்களுடன் இந்தியா புறப்பட்ட 4வது விமானம் இன்று காலை டெல்லி வந்தடைந்தது என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
காசாவில் உள்ள வெளிநாட்டவர்கள் பாதுகாப்பாக எகிப்து வழியாக வெளியேறுவதற்கான ஒப்பந்தம் அமெரிக்கா, இஸ்ரேல், எகிப்து இடையே ஏற்பட்டுள்ளதாக எகிப்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலின் டெல் அவிவில் இருந்து 274 இந்திய பயணிகளுடன் 4-வது விமானம் இந்தியாவுக்கு புறப்பட்டுள்ளது. இதனை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் காரணமாக அனைத்து விமான சேவைகளையும் அக்டோபர் 18-ம் தேதி வரை ரத்து செய்துள்ளோம் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
இஸ்ரேலில் இருந்து 197 இந்திய பயணிகளுடன் மூன்றாவது விமானம் டெல்லி விமான நிலையத்தில் இன்று தரையிறங்கியது. டெல்லி விமானநிலையம் வந்தடைந்த இந்தியர்களை மத்திய மந்திரி கவுசல் கிஷோர் நேரில் சென்று வரவேற்றார்.