இஸ்ரேல்-ஹமாஸ் போர் லைவ் அப்டேட்ஸ்: காசாவில் உள்ள ஹமாஸ் தலைவரை கண்டுபிடித்து ஒழிப்போம்: இஸ்ரேல்
காசா எல்லைகள் மூடப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கிருந்து நாட்டை விட்டு வெளியேற வேண்டுமானால் அருகில் உள்ள எகிப்து நாட்டிற்குள்தான் செல்ல வேண்டும்.
காசா ஸ்ட்ரிப் பகுதியில் நிலைகொண்டுள்ள இஸ்ரேல் ராணுவ முகாமுக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு புல்லட் புரூப் கவசம் அணிந்துகொண்டு வந்தார். அங்கு, படையினருடன் ஆலோனை நடத்தினார்.
இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் விவகாரத்தில் அமெரிக்கா பொறுப்பான பங்கு வகிக்க வேண்டும் என்று சீனா வலியுறுத்தி இருக்கிறது.
இஸ்ரேல் போர் குற்றத்தில் ஈடுபட்டு வருவதாக ஹமாஸ் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. வெளியேறி சென்ற பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி, போர் விதிகளை இஸ்ரேல் ராணுவம் மீறி இருப்பதாக ஹமாஸ் குற்றச்சாட்டு.
காசா மற்றும் வடக்கு காசா பகுதிகளில் உள்ள ஐ.நா.மீட்பு முகாம்கள் இனி பாதுகாப்பானவை அல்ல என்று காசாவில் உள்ள ஐ.நாவின் மீட்பு மற்றும் நிவாரண நிறுவனம் அறிவித்துள்ளது.
ஹமாஸ் படையால் பிணை கைதியாக பிடித்து வைக்கப்பட்டு இருக்கும் ஒருவரின் குடும்பத்தினர் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ்-இல் உள்ள இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காரில் சென்று கொண்டிருந்த பி.பி.சி. அரேபிய செய்தியாளர் குழுவை இடைமறித்து காரில் இருந்தவர்களை இஸ்ரேல் போலீசார் தாக்கியதோடு, துப்பாக்கி முனையில் விசாரித்தனர்.
போரில் ஹிஸ்புல்லா தலையிட்டால் இஸ்ரேலுக்கு மிகப்பெரிய ஆபத்தாக அமையும் என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாலஸ்தீனியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் நாங்கள் பெரும் படையுடன் தாக்கப் போகிறோம் என்றும் இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா இயக்கம் இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்தி வருகிறது. லெபனானில் இருந்து இஸ்ரேல் எல்லைக்குள் ஊடுருவ முயன்றவர்களை கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் விமானப்படை ஆளில்லா வான்வழி தாக்குதல் மூலம் ஊடுருவ முயன்றவர்கள் கொல்லப்பட்டதாக தெரிவித்தது.